ஒரே நிழல்

அலக்ஸாண்டிரா போபாஃப் எழுதிய நூலை நண்பர் சிறில் அலெக்ஸ் கவனமாகவும், நுணுக்கமான குறிப்புகளுடனும் மொழியாக்கம் செய்துள்ளார். அந்த இலக்கிய ஆளுமைகள் பற்றிய குறிப்புகளும், மொழிபெயர்ப்பு பற்றிய குறிப்புகளும் இந்நூலில் உள்ளன.
இந்த மனைவிகளின் உலகம் வழியாகச் செல்லும் இந்நூல் ஒரு மிகப்பெரிய நாவலை வாசிக்கும் உளஎழுச்சியையும், மனநிறைவையும் அளிக்கிறது. இந்தப் பெண்கள் ஒவ்வொருவரும் மகத்தான கதைநாயகியராக திரண்டு வருகிறார்கள். சில இடங்கள் பெரும்புனைகதை போன்றவை.
இந்த ஒவ்வொரு வாழ்க்கையையும் தனித்தனி நாவல்களாக விரிவாக்கிவிடலாம். ஒரு புனைவெழுத்தாளனாகிய எனக்கு பலநூறு மானுடத்தருணங்களின் பெருந்தொகுப்பாகவே இந்நூல் தோற்றம் அளிக்கிறது. தமிழுக்கு ஒரு முக்கியமான நல்வரவு இது.

 550.00

ISBN: 978-93-93725-49-3

Description

எழுத்தாளனின் மனைவி என்பது ஒரு சாபம், ஒரு வரம். எழுத்தாளனின் உலகியல் பொறுப்பின்மை, கனவுத்தன்மை, உணர்ச்சிநிலையின்மை ஆகியவற்றை அந்த மனைவி சுமக்கவேண்டியிருக்கும். ஆனால் அந்த மனைவிக்கு கொஞ்சம் இலக்கியம் தெரியும் என்றால் தன் கணவனுடன் இலக்கியத்தின் உலகுக்குள் செல்லமுடியும், உலகியலுக்கு அப்பாற்பட்ட ஒரு தளத்தில் வாழமுடியும்.
ரஷ்ய இலக்கிய மேதைகளான தல்ஸ்தோயின் மனைவி சோபியா, தஸ்தயேவ்ஸ்கியின் மனைவி அன்னா, மாண்டில்ஸ்டமின் மனைவி நடேஷ்டா, நபக்கோவின் மனைவி வியரா, பல்ககாவின் மனைவி மார்கரீட்டா, மண்டல்ஸ்டமின் மனைவி நடேஷ்டா, சோல்செனிட்ஸினின் மனைவி நட்டாலியா ஆகியோர் பற்றிய நூல் இது.

Additional information

Weight 0.75 kg