Description
புத்தகங்களும் எழுத்தாளர்களும் கதைகளும் அனுபவங்களும் கருத்துகளும் யதார்த்தங்களும் சேர்ந்து உருவாகும் அதிசய உலகிற்கான ஒரு கற்பனைப் பயணம் இது. ‘நான் வாசித்த புத்தகங்களும் பேசிய வார்த்தைகளுக்கும் உள்ளேயிருந்து தான் என்னுடைய கதைகளும் உன்னுடைய கதைகளும் வருகின்றன என்பது போன்ற ரகசிய தீர்மானங்கள் இதில் நிறைய உள்ளன. சிக்கலான மனித உறவுகளினூடாகவும் மனதின் இருண்ட பாதைகளினூடாகவும் செல்லும் முடிவற்ற தேடலே இப்புத்தகம். ஆழம் குறையாத எளிமையான நடை இம்மகத்தான நூலை வாசகர்களுக்கான காதல் பரிசாக மாற்றுகிறது.




