Description
இந்த ஆத்ம கதையை வாசித்தபோது அதிர்ந்துபோனேன், நல்நிலவு போல ஒரு சிரிப்பு எப்போதும் அந்த முகத்திலிருக்கிறது. கடந்த போன வாழ்க்கைச் சுழல்களையெல்லாம் அழித்தொழித்து மேலேறி நிற்க கடவுள் கொடுத்த சிரிப்பென்றும் சொல்லலாம். தான் குரல் கொடுத்த கதாபத்திரங்கள் யாருமே இவ்வளவு வேதனைகளைச் சகித்திருக்கமாட்டார்கள். சத்தியத்தின் உள்ளொளியோடிருக்கும் வார்த்தைகளை பாக்யலஷ்மி அவளின் கண்ணீரில் அடுக்கி உயர்த்திய தியான மண்டபம் இந்த புத்தகமென்று சொல்லலாம்.
-எம்.டி.வாசுதேவன் நாயார்