அத்தனையும் பச்சை நிறம்

பூகோளத்தின் தட்பவெப்பம் குளிரில் மேற்சட்டை அணிந்துகொள்ளச் செய்கின்றது, வெப்பத்தில் மெல்லிய ஆடை உடுக்கச்சொல்கின்றது. மேலாடைகளின் வடிவங்களும் தயாரிப்புகளும் மாறுகின்றன. குளிரும் வெப்பமும் அவைகளுக்கான குணங்களிலிருந்து மாறாமல் இருக்கின்றன. மனிதர்களின் பகட்டுநிலை மாறுபட்டபோதிலும்
பசியும் பாசமும் ஒன்றாகத்தான் இருக்கின்றன.

இந்த உலக மேடை அத்தனை மனிதர்களுக்கும்

ஒரே கதாபாத்திரத்தைக் கொடுக்கவில்லை, பாத்திரம் தாங்கிய மனிதன் அப்பாத்திரமாகவே மாறிப்போனதுவும் தொல்லை.

ஒரு கோடு, நிலப்பரப்பை நாடு என்று பிரித்துவிடுகின்றது.

நாடு தாண்டிப் பொருளாதாரத்தை நாடும் மனிதனின் வலியைப் புறந்தள்ளிவிடுகின்றது. அப்படி ஆறுதல் தேடிக்கொள்ள முனைந்த வலிகளை இங்கே பதிவாக்கியிருக்கிறேன்.

 150.00

Additional information

Weight 0.35 kg