Murinaavu

என்னை எந்தக் காலத்திலிருந்தும் என்னால் கண்டடைய
முடியும், உங்களையும்.

காலத்தின் பிளர்ந்த நாக்கின் ஒரு பாதியாகிப் புறப்பட்டு கி.பி. எட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த குமரனையும், அதே நாவின் மறுபாதியிலிருந்து சிதறி விழுந்த வரிகளினூடே
குமரனின் நாட்டில் அதே குலத்தில் பிறந்து, பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் அவனைப் பின்தொடர்ந்த
அலங்காரனையும் எனக்கு நேருக்குநேர் பரிச்சயமுண்டு.

ஏதோ ஓர் ஓசையைப் பின்தொடர்ந்து இருவரும் சென்றடைந்தது அவளூரையே.

அவளூரின் மரங்களில் குடியிருந்த யட்சிகள்
சில இரவுகளில் நிறைய கதைகள் சொல்லின.
அப்போதுதான் இங்கே என் தோட்டத்தில் பாலைப்பூக்கள் பூத்தன.

இக்கதைகளில் வந்து போனவர்கள் எல்லாம் என்னுடனும் இருக்கிறார்கள். முறிந்த நாவிலிருந்து வரும் சொற்கள் அவர்களை மட்டுமல்ல, என்னையும் சுழற்றுகின்றன.

அதனால் இந்த எழுத்து என்னையும்
உங்களையும் போல
முறிந்து… முறிந்து…

 600.00

Category:

Additional information

Weight 0.35 kg