Description
நவீன இந்திய பெண் எழுத்தின் முன்னோடியாகவும் அதே வேளையில் பெண்ணியத்திற்கெதிரான வலுவான குரலாகவும் ஒலிப்பவை கமலாதாஸின் கதைகள். தனது கதாபாத்திரங்களை அன்பின்; காதலின் மொழியினூடாகப் புதியதோர் உலகில் பிரவேசிக்க வைத்தவர். அன்புக்கு ஏங்கும் பெண்கள் மூலம் தன்னையே கதாபாத்திரமாக வெளிப்படுத்திக் காட்டியவர். கமலாதாஸ் ஒருபோதும் குடும்ப உறவை எதிர்ப்பவர் அல்ல. ஆனால், மரபான பெண்ணின் மனச்சாய்வுகளை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எள்ளி நகையாடவும் அவர் தயங்கவில்லை.