Description
உக்ரேன்-ரஷ்ய போர் ஆரம்பித்து ஒரு மாதம் முடிந்தபோது எனது நண்பி சிசில் மூலம் லானாவைச் சந்தித்தேன். சிசிலின் நண்பர்களான வைத்திய இணையர் உக்ரேன் எல்லைக்கு சென்று லானாவையும் அவள் மகனையும் அழைத்து வந்து தங்கள் வீட்டில் வைத்திருக்கிறார்கள். குறுந்தொகையில் ஒரு பாட்டில் தன் மகள் காதலனோடு காட்டு வழியே சென்றதை எண்ணி தாய் ஏங்குகிறாள். கடும் பசியோடு புலிகள் பதுங்கி இருக்கும் அந்த காட்டுப் பாதையில் எப்படி அவள் போனாளோ என்று பதை பதைக்கிறது அவள் இதயம், இதை எழுதி முடிக்கும் போதும் கைபேசியைப் பார்க்கிறேன் லானாவிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.