Description
யார் யாரோ யாருக்காகவோ சிந்தும் சொற்களில் இருந்து எனக்கானவற்றை மட்டும் சேமித்து எடுத்து நான் சேர்த்த சொற்குவியலின் மீது நின்று கொண்டு, இந்த வாழ்வெனும் குளத்தில் எறிந்த சிறு கற்கள்தான் இந்த எழுத்து… எங்கோ திடமற்று வாழும் ஒரு பெண் மனதை, அன்பின் ஒற்றை வார்த்தைக்குப் பரிதவிக்கும் ஒரு குழந்தையின் பாதையை, அடையாளங்களற்ற ஒரு ஆசிரியரின் வாழ்வை, நிறைமனதோடு பயணிக்கும் ஒரு மனித மனதைத் தீண்டும் நிமிடம் வரை இதன் பயணம் தொடரட்டும்…
                                

