Description
பழக்கப்பட்ட பறவையின் குரல் கேட்டது சட்டைப்பைக்குள் அடங்கியிருக்கும் அலைபேசியை தொட்டுப் பார்த்தேன். அது அதிர்வில் இல்லை கணத்தின் கிளையிலிருந்து கால் நழுவி பதறியது மனம் நிஜத்தில் எழுந்த அந்தக் குரல் எங்கே என்று தேடினேன். காண்பாரற்ற கதியில் விடைப்பெற்றிருந்தது பறவை.