Description
வாழ்வைப் பிரதிபலிக்கும் காலத்தின் நீட்சி, நம்முன்பு
ஒரு கண்ணாடி வெளியாகப் படர்ந்திருக்கிறது. அதன் விம்பங்கள் உடைந்து தெறிக்கும் கணங்கள், இங்கு சிறுகதைகளாக வடிவமெடுத்திருக்கின்றன.
இக்கதைகளின் மாந்தர்கள் என்னுடன் வாழ்ந்து மரித்தவர்கள் மற்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். சந்தோஷமும், துக்கமும், ஏக்கமும், பிரிவுமாக
தினந்தோறும் எத்தனையோ ஜீவன்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. அனைத்து ஜீவிதங்களினதும் ஓரோர் சுவாசமும் இப்பெரும் அடவியின் கொடைதான் இல்லையா?
அவ்வாறே எல்லாவற்றிலும், எல்லோரோடும் வாழ்ந்து விடுகிறோம். எனில் எதைத்தான் தவிர்த்துவிட முடிகிறது?