Description
தன் கண் முன்னால் நடக்கும் அயோக்கியத்தனத்தைக் கண்டு உச்சு கொட்டி கண்ணில் சோகம் வழிய விட்டுக் கடந்து செல்லும் அதிகபடியான மக்களின் மத்தியில், அதன் வேர் வரைப் போய்ச் சரி செய்யும் குணம் படைத்த பல இளைஞர்களை நான் நட்பாக்கிக் கொள்ள முடிந்தது. எருமையை வெட்டிப் பொலி போடும்போது ரத்த கவிச்சி என் மூக்கில் மஞ்சள் குங்குமம் கலந்த வாசத்துடன் துளைத்தேறுகிறது. பேய் பிடித்து ஆடும் பெண்ணின் ஆசைகளும் சாராயம் குடிப்பதும் தன்னைக் காயப்படுத்திக் கொள்வதும் என் இளம் பருவத்திலிருந்தே நான் பார்த்துப் பார்த்துப் பழக்கப்பட்ட பதிலில்லாத கேள்விகள். என் பால்யத்தைத் திரும்பிப் பார்க்க வைத்த நிகழ்வுகளாய் சில கதைகள் இருக்கின்றன. அதே போல இந்தத் தொகுப்பை வாசிக்கும் எல்லோருக்கும் அப்படித் தன் வாழ்வோடு இணைத்துப் பார்க்கக்கூடிய தொகுப்பு ‘பொலி எருமை’




