Description
என்னுடைய மனம் என்கிற ராஜசபையில் செயப்பிரகாசத்துக்கு ஒரு தனி இடம் உண்டு.
பொதுவாக, கரிசல் காட்டு எழுத்தாளன அன்பர்கள் எவர் எழுதிய எழுத்தை படித்தாலும் மனம் உருகிப் போவேன். அவை இந்த மண்ணின் மனிதர்களை பற்றி எழுத்தப்பட்டவை. இவர்களுடைய எழுத்துக்களை என்னைவிட அதிகம் அனுபவிக்க முடியாது. அம்புட்டும் எனது மக்களைப் பற்றிய சேதிகள் அடங்கியவை.




