Description
ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கே போக முடியாதவர்களுக்கு, போலாம்தான் ஆனா அதுக்கான நேரமே சரியா அமையல என்பவர்களுக்கு, போகனும்ன்னு நினைக்கிறேன். ஆனா வேலையே சரியா இருக்கு என்பவர்களுக்கு, உள்ளூரிலேயே திருமணம் முடித்துக் கொண்டு பேருந்து பயணமே கனவாகிப்போனவர்களுக்கு, இன்னும் நான் ரயிலே ஏறனதில்ல என ஏங்கும் மனதை எப்போதாவது வெளிப்படுத்துபவர்களுக்கு, மழை வரப் போவதை முன்ன்றிவித்துப் பறக்கும் தும்பி அளவில் ஆகாயவிமானம் பார்க்க ஒவ்வொரு முறையும் தன் குடிசையை விட்டு வெளியே ஓடி வருபவர்களுக்கு இந்த புத்தகத்தை வாசிக்கக் கொடுக்கிறேன். நீங்கள் நிச்சயமாக இதில் என்னைக் கண்டடைவீர்கள்.