Additional information
Weight | 0.23 kg |
---|
எனக்கும் கோணங்கிக்கும் பவாவின் வீடுதான் தாய்வீடு, பவாவைப் போல எழுத்தாளர்களை நேசிக்க வேறு எவராலும் முடியாது. ஷைலஜா, வம்சி என்று அவரது குடும்பமே அன்பால் உருவானது. பவாவின் அன்பும் நட்புமே என் எழுத்திற்கு எப்போதுமே உத்வேகம் அளித்துவருகிறது.
நண்பர்களை மதிக்கவும், கௌரவப்படுத்தவும், கொண்டாடவும் பவாவிடமிருந்தே கற்றுக்கொண்டிருக்கிறேன். 19.டி.எம்.சாரோன் என்பது பவாவின் இல்ல முகவரி மட்டுமில்லை, நவீன தமிழ் இலக்கியத்தின் முகவரியும் அதுவே என்று எஸ்.ராமகிருஷ்ணனும்
இடதுசாரி இலட்சியவாதம் என நினைக்கும் ஒன்றின் மனிதவடிவமென பவாவை எண்ணிக் கொள்பவன் நான். எந்நிலையிலும் எப்போதும் மனிதர்களுக்கு உதவத் தயாராக இருப்பவர். எங்கும் எதிலும் நல்லதை மட்டும் பார்க்கக்கூடியவர். எந்தக் கரன்ஸியை விடவும் நல்லியல்புக்கு செலாவாணி அதிகமென பவாவை கொண்டே நான் நம்பி வருகிறேன். ‘அறம்’ வரிசை சிறுகதை கதைமாந்தர்களின் உலகைச் சேர்ந்தவர் அவர் என ஜெயமோகனும் இத்தொகுப்பின் மூலம் மதிப்பிடுகிறார்கள்.
₹ 225.00
Weight | 0.23 kg |
---|