Description
விறால், விலாங்கு, கெண்டை, பொத்தி, உழுவை, கெளிறு, அயிறை, ஆரா, தேளி, கொறவை என்பதெல்லாம் கடந்த காலமாகி, கண்ணாடித் தொட்டிக்குள் பெயர் தெரியாத கடல் மீனை இட்டுவைத்து ‘ஞூடிண்ட’ என்ற ஒரே சொல்லில் சொல்லிக்காட்டி எல்லா மீன்களையும் மறக்கடித்து வருகிறோம்.
மாற்றம் வேண்டும்; மாற வேண்டும்;
அதற்கு வழி நடத்தும் சொல்லாடல்களே நூலின் கட்டுரைகள். இனி கட்டுரைகள்
உங்களோடு கதையாடும்.