Description
நெருப்புச் சூடு ஏற ஏற, சேமிக்கப்படும் உணவு அடிபிடித்து நாற்றம் எடுப்பது போல், அதிகார நெருப்பு ஏற ஏற சனநாயகம் அடிபிடித்து நாற்றம் வீசுகிறது. குடும்பம், சாதி, மதம், இனம், பாலியல், அரசு, கல்வி அமைப்பு அனைத்து நிறுவனமயத்துள்ளும் சனநாயக மாண்புகள் கருகி நாற்றமெடுக்கின்றன. பருவநிலைச் சிதைப்பு, சூழல் கேடு, மண்ணின் கலைகள் அழிப்பு, மனசாட்சியற்ற அரசியல், இலக்கியவினைகள் எனக் கருகி நாற்றம் வீசும் வாழ்க்கை பற்றியது இந்த ஏழுத்துக்கள்.