Description
மசினி யானை ஓரிடத்தில் சங்கிலியால்
கட்டி வைக்கப்பட்டிருந்ததை பார்க்கிற
பொம்மன் மசினியை ஆரத்தழுவுகிறார்.
பொம்மனை மசினி யானை
அடையாளம் கண்டு கொள்கிறது.
தன்னுடைய தும்பிக்கையால்
பொம்மனை தடவி கொடுக்கிறது.
பொம்மன் மசினி குறித்து எவ்வளவு
கனவு கண்டிருப்பான். காயத்தோடு
இருக்கிற ஒரு கனவை கூட அவன்
இதுவரை கண்டதில்லை. ஆனால்
கனவு வேறு, களம் வேறு, மசினி
யானையை பார்க்கிற பொம்மன்
அப்படியே உடைந்து போகிறார்.
ஏனெனில் முதுமலையில் இருந்த
அதன் மொத்த எடையில் பாதிதான்
இப்போது மசினி இருந்தது.