கனவுகள் ஓடும் நாளங்கள்

ஒவொரு படைப்பாளிக்கும் அகம் உணரும் தருணம் தான் படைப்பின் உச்சம். வாழ்வின் உச்சமும் கூட. தன்னை மட்டுமல்லாமல் மறுஇதயங்களின் வழியையும் மென் உணர்வுகளையும் உணரும்போது ஒரு சாமானியன் படைப்பாளி ஆகிறான். ஜானு பல கவிதைகளில் அப்படியான நொடிகளை தாண்டிச் செல்கிறாள்.
இடறி விழுந்த பறவையின் காயத்தை மயிலிறகென வருடித் தோற்ற பறவையின் பாஷை தெரிந்திருக்க வேண்டியதில்லை, வலி உணரும் மனம் போதும் என்று நம்மை உணர வைக்கும் ஜானுவின் ஏழுத்துக்கள் பெண்ணியக்குரலின் வறட்சியற்று அதே சமயம் தன நிலைப்பாட்டை உறுதியாய் பதிவு செய்கிறது. உங்கள் தேவதைப் பட்டங்கள் எனக்கு வேண்டாம், என் சிறகுகளே போதும் என்று நம்பிக்கையும் தெளிவும் துளிர்க்க பேசுகிறார்.

 140.00

Category:

Additional information

Weight 0.25 kg