Description
எனது நிலத்தின், எனது நீரின், எனது தாகத்தின்,
எனது இச்சையின், எனது காமத்தின் அத்தனை விழுமியங்களின் மீதும் பற்றுகொண்ட ஒரு பழங்குடிதான் கவிஞர் பச்சோந்தி.
அவனின் இந்தத் தொகுப்பு அவன் அறிந்த மொழிகளின் கதை. அவன் வீடு ஒரு தொங்கும் அங்காடி. அவன்
அங்காடிகளின் தெருவில் அலைகிறான். குழந்தைகள் கை நீட்டும் பொருட்களின்மீது அதிர்ச்சியுற்றவனாய் அவனைக் கண்காணிக்கும் இஇகூங கேமராக்களின் பார்வைக்குத் தப்பி விமானத்தை மண்டியிட்டுத் தொழும் மனிதர்களைப் பார்த்துப் புன்னகைக்கிறான். அவனது கவிதை புராதனக் குரங்குகளின் கோட்டோவியம்.
யவனிகா ஸ்ரீராம்