Description
இக்கவிதைகள் முழுக்க அகம்சார்ந்த கவிதைகள். ஒரு மேம்போக்கான
அர்த்தத்தில் இவைகள் காதல் கவிதைகள் எனும் பொருள் பெறக்கூடும்.
எனினும் அத்தளத்தினும் ஆழமானவை இக்கவிதைகள். பெண் – ஆண் உறவில் உளவாகும் அகம் மற்றும் அது சார்ந்த நுணுக்கங்கள் கூடிய கூற்றுகளால் வடிவமைக்கப்பட்டவை இவை.
சக்தி ஜோதி, மிக எளிமையான மிக இயல்பான சொற்களையே கொண்டு தன் கவிதைகளை அமைத்திருக்கிறார். அச்சொற்களுக்கு கனமும் நுட்பமும் ஆழமும் கூடிவரக்காரணம் என்ன? வாழ்க்கையின் ஒரு முக்கிய அசைவை, சிதறல் இல்லாமல் உண்மைபோல யதார்த்த அழகோடு வடிவமைக்கும் அவரது செய்நேர்த்தியே ஆகும். அத்தோடு காதல், நட்பு என்பதை எல்லாம் மனிதர் எல்லோரும் ஏதோ ஒரு பருவத்தில் ருசித்த சுவைகளே. அந்த ருசியை சரியான சொற்களால், பொருத்தப்பாட்டோடு கவித்வம் தழைய ஒருவர் சொல்லும் போது உலகம் காது விரியக் கேட்கிறது. இது எளிதல்ல.