Description
மூளையின் கூடுகளில் பறவைகளின் ஒலி தவழ்ந்திருந்த காலங்கள். எண்ணங்களின் சுள்ளிகள் உரசி கூடுகள் பற்றி எரிந்தன. பறவைகளின் ஓலம், கருகிய வாசனை மூக்கின் வழியாக வெளியேறி பிண வாடையில் நண்பர்கள் விலகி ஓடினர். நிலவும், சூரியனும் தாயக்கட்டையாய் உருட்ட தனியே ஒரு பயணம்.