Description
உமா மகேஸ்வரி தன் சமகாலத்தில் எழுதிக் கொண்டிருக்கிற பெண் படைப்பாளிகளுள் தனித்துத் தெரிவதில் முக்கிய இடத்தை தனக்கெனத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். அவரின் கதைகளில் வரும் பெண்கள், குடும்பப் பிரச்சனைகள், கணவன் மனைவி உறவு, குழந்தைகள், குடும்பம் சார்ந்த உறவு, அதன் சிக்கல்கள் என்பதோடு நின்றுவிடாமல் சமூகம் சார்ந்த, அதன் எல்லைவரைபல பிரச்சனைகளைப் பேசுவதும் அதனைப் பெண்ணிய மனோபாவத்தோடு அணுகுவதுமாக கவித்துவமான வரிகளில் சிறப்பாக வெளிப்பட்டிருக்கின்றன.