Description
தீங்கருதின் பருவத்தில் கொல்லன் காட்டுக்குப் போனான். கூடவே ஆறு பெண்மக்களும் போனார்கள். பிள்ளைகள் தின்பண்டத்திற்கு அலைந்து போனது. ரெண்டு கம்பங்கருதை நிலக்கசக்காய் கசக்கி கொம்பையை ஊதி வாயில் போடவும். பிள்ளைகளுக்கு ஒரே குதிப்பு.
தட்டையை விலகி வரும்போது தீங்குதின் அடித்தூரில் குருவி கட்டிய கூடு. காய்ந்து கருகும் பச்சைப் புல்லும் தழையத் தழைய விட்டு அடுக்கி வருகிறது. இன்னும் கட்டி முடியாத கூடு. சாம்பல் புள்ளி வைத்த முட்டையைச் சுற்றி பச்சைப் புல்லை மூடியிருந்தது குருவி. குனிந்து ஆடும் கருதுக்கும் மேல் புர்ர்ர் ர்… ர்… ரென்று கொல்லனைச் சுற்றி வட்டமடித்தது குருவி.