Description
உங்கள் படைப்பில் முதலாக நான் வாசித்தது ஒரு மழைப் பொழிவினால் மரணம் மன்னிக்கப்பட்ட திருடனின் கதை. மிகுந்த பிரமிப்புடன், ஒருவார காலம் அந்தக் கதையையே நினைத்துக் கொண்டிருந்தேன்.
இப்படி மானுடச் செயல்கள் வழியே மானுடத்தை மீறி நிற்கும் ஒரு மகத்தான உணர்வைச் சொல்ல முடிந்த இந்த ஆள் யார் என்றுதான்
உங்கள் பெயரை கவனிக்க ஆரம்பித்தேன்.
வேட்டை கிட்டத்தட்ட ‘கடலும், கிழவனும்‘தான். வேட்டை அளவுக்கு தமிழில் இயற்கைக்கும், மனிதனுக்குமான உறவினைப் புரியவைத்த கதைகள் ஒரு கை விரல் எண்ணிக்கையில் அடக்கம்.
உங்கள் படைப்புகளில் உருவாகிவரும் மனிதர்கள் மட்டும் எப்போதும் தனித்துவம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
ஜப்பான் கிழவன் போன்ற ஒரு கதைமாந்தன் இதுவரை தமிழில் பேசப்பட்டதில்லை.
– ஜா.ராஜகோபாலன்