Description
இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகள் ஒவ்வொன்றும் மனிதநேயத்தை உள்ளடக்கியவை. அலங்காரப் பூச்சுகள் எதுவுமின்றி அப்பட்டமாகப் பிரச்சினைகளைப் பேசுகின்றன. அநேகக் கதைகள் இந்தப் பெருந்தொற்றுக் காலத்தின் பின்னணியில் எழுதப்பட்டவை என்பது இடம் மற்றும் சூழல் வர்ணனைகளில் வெளிப்படுகின்றன. குறிப்பாக மனுசி என்கிற கதையின் பின்னணியே அதுதான். ஓர் இடத்தின் மற்றும் சம்பவத்தின் வர்ணனைகள் நம்மை அப்படியே அங்கே அழைத்துச் சென்றுவிடுகின்றன. பாத்திரங்கள் பேசும் வசனங்களில் மிகையென்பதே இல்லை. எதார்த்தமாக அந்தச் சூழலுக்கு என்ன பேசுமோ அதை மட்டுமே அளவெடுத்துப் பேசுகின்றன. கிராமத்துக் கதைகளில் நேட்டிவிட்டி என்று
சொல்லப்படுகிற மண் வாசம் தூக்கலாகச் சிறப்பாக அமைந்திருக்கின்றன. கதைகளின் பாத்திரங்கள் பெரும்பாலும் மனசாட்சியுடன் அறம் சார்ந்து சிந்திக்கின்றன.
ஒவ்வொரு கதையும் ஓர் அனுபவம். அறத்தின்
பார்வையை ஏந்திய இந்தக் கதைகளை எழுதியுள்ள ஆசிரியர் மணிமாலாவுக்கு எனது மனப்பூர்வமான பாராட்டுகளும், வாழ்த்துகளும்..
பிரியங்களுடன்,
பட்டுக்கோட்டை பிரபாகர்