Description
யாதுமற்ற தனிமையில் அமர்ந்து ரணமுலர்ந்து வடுவாகியிருக்கும் காயங்களைத் தடவிப் பார்த்துக் கொள்ளும் பெண்களின் துக்கம் நிறைந்த நிமிடங்களை இத்தொகுப்பெங்கும் பதிவு செய்திருக்கிறார்.
கொலை செய்யப்பட்டவனின் முகம்போல கனத்துப்போன மௌனமும், பலாத்காரம் செய்யப்பட்டவளின் காயங்கள் போல ஒற்றை வார்த்தைகள் குத்திக் கிழிந்த சினேகமும் இக்கவிதைகளுக்குள் வியாபித்துள்ளன.
சியாமளாவின் வார்த்தைகள் அல்ல…
ஆத்மாவை மொழிபெயர்த்துள்ளார் கே.வி.ஜெயஸ்ரீ