Description
இதில் முக்கிய ஏழு ஈரானிய திரைக்கதைகள் நாவல் வடிவில் இடம் பெற்றிருக்கின்றன. ஈரானிய நியூவேவ் சினிமாவின் சாரமாக இதனைச் சொல்லலாம்.
குழந்தைமையின் எளிமை, காதலின் உச்சம், நுட்பமான குடும்ப உறவுகளின் சிடுக்கு பெண் ஆண் சமத்துவம், பெண் உடல் குறித்த பார்வை நெடுங்காலமாய் பெண் சுதந்திரத்திற்கு தடைச்சுவராய் நின்றுக்கொண்டிருக்கிற சமூக, பொருளாதார அரசியல் நிலைபாடுகளுக்கு எதிரான ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பு என இதில் இடம் பெற்றிருக்கும் கதைகள் ஈரான் தேசத்தின் ஒட்டுமொத்த ஆன்மாவைத் துல்லியமாய் பதிவு பெற்றிருக்கிறது