பொலி எருமை

இவர் கதைகளில் தன்னை வஞ்சித்தவனைக் காற்றுக்குக் கூடத் தெரியாமல் பழி வாங்கத் தெரிந்தவளின் மன உரம் தெரிந்தது. நட்புக்காக உயிரின் கடைசி சொட்டு வரை வாழும் பெண்ணின் வைராக்கியம் தெரிந்தது. சமூக அக்கறையைக் கண்ணுற முடிந்தது. மனிதத்தைத் தாண்டிச் சக உயிர் மேலான பரிவைப் பார்க்க முடிந்தது. ஆக, பெண் மன வலிமையும் தலித் மக்களின் வாழ்வின் பெருமிதத்தையும் பெரிய மேளம் அடித்து உலகிற்குச் சொல்லும் எழுத்தாய் நான் பாரத் தமிழின் கதைகளைப் பார்க்கிறேன்
ஒவ்வொரு சமூக மக்களுக்கும் அவர்களின் வரலாற்று அடிப்படையில் குணங்கள் வேறுபடுமென்று சில குரல்கள் சொல்வது உண்மையானால்… ஆமாம், வேறுபடுகிறது… அவர்களின் குணம் ஈகை… அவர்களின் குணம் கூட்டமாய் இருப்பது… அவர்களின் குணம் பெருந்தன்மை… அவர்களின் குணம் விட்டுக் கொடுப்பது… அவர்களின் குணம் சக ஜீவனை அரவணைத்துக் கொள்வது… அவர்களின் குணம் கட்டற்ற அன்புடன் இருப்பது… அவர்களின் குணம் தன் மக்களை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காமலிருப்பது… அவர்களின் குணம் தங்கள் வாழ்வு குறித்து பெருமிதம் கொள்வது…
தன் கலையின் மூலம் தங்கள் வாழ்வில் சிறு ஒளியேனும் பாய்ச்ச முடியுமென்ற அவருடைய நம்பிக்கையை ‘வம்சி புக்ஸ்’ அணையாமல் கை மாற்ற விரும்புகிறது.

கே.வி. ஷைலஜா

 250.00

ISBN: 978-93-93725-99-8

Description

தன் கண் முன்னால் நடக்கும் அயோக்கியத்தனத்தைக் கண்டு உச்சு கொட்டி கண்ணில் சோகம் வழிய விட்டுக் கடந்து செல்லும் அதிகபடியான மக்களின் மத்தியில், அதன் வேர் வரைப் போய்ச் சரி செய்யும் குணம் படைத்த பல இளைஞர்களை நான் நட்பாக்கிக் கொள்ள முடிந்தது. எருமையை வெட்டிப் பொலி போடும்போது ரத்த கவிச்சி என் மூக்கில் மஞ்சள் குங்குமம் கலந்த வாசத்துடன் துளைத்தேறுகிறது. பேய் பிடித்து ஆடும் பெண்ணின் ஆசைகளும் சாராயம் குடிப்பதும் தன்னைக் காயப்படுத்திக் கொள்வதும் என் இளம் பருவத்திலிருந்தே நான் பார்த்துப் பார்த்துப் பழக்கப்பட்ட பதிலில்லாத கேள்விகள். என் பால்யத்தைத் திரும்பிப் பார்க்க வைத்த நிகழ்வுகளாய் சில கதைகள் இருக்கின்றன. அதே போல இந்தத் தொகுப்பை வாசிக்கும் எல்லோருக்கும் அப்படித் தன் வாழ்வோடு இணைத்துப் பார்க்கக்கூடிய தொகுப்பு ‘பொலி எருமை’

Additional information

Weight 0.45 kg