Description
வாழ்வில் ஒருவரிடமோ பலரிடமோ எப்போதாவதுதான் மௌனம் கலைந்து நம்மை முழுமையாய் ஒப்புக்கொடுத்து பேச முடிகிறது. எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் நம் இதய தமனிகளின் உள்ளுக்கு உள்ளே துளியையாவது இறுக்கி வைத்துக்கொள்ளாமல் திறந்து காட்டிவிட முடியாது. அப்படி நமக்குள் ஒதுக்கி வைத்துக் கொண்டுதான் மனிதர்கள் பேசிக் கொண்டேயிருக்கிறோம்.



